×

ஜேகே. ரித்திஷ் நினைவிடத்தில் அஞ்சலி

ராமநாதபுரம், மார்ச் 7: ராமநாதபுரம் அருகே மணக்குடி கிராமத்தில் மறைந்த முன்னாள் எம்பியும், நடிகருமான ஜேகே.ரித்திஷின் 48வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் அவரது மனைவி ஜோதிஸ்வரி நாச்சியார், மகன்கள் ஆரிக்ரோசன், ஜெய்ரிக்ரோசன் மற்றும் தானவி நாச்சியார், திமுக பிரமுகர் டிஆர் குரூப்ஸ் கம்பெனி திருமாறன், எம்ஜி மொபைல்ஸ் மதுரை ராஜா முகமது, திருப்பாலைக்குடி பொதுச்சபை தலைவர் டூயட்பாபு ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு நினைவிடத்தில் புதிதாக கட்டப்படவுள்ள நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. தொடர்ந்து ரித்திஷின் ஆதரவாளர்கள், அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Tags : JK ,Rithish Memorial ,
× RELATED டிராவல்ஸ் அதிபர் மீது தாக்குதல்